20 ஆயிரம் மெட்ரிக் டொன் கரிம பசளையுடன் சீனக் கப்பல் ஒன்று இலங்கை நோக்கி வருவதாக கூறப்படுகிறது.
செப்டம்பர் 22ஆம் திகதி சீனாவின் சண்டாகோ துறைமுகத்தில் இருந்து குறித்த கப்பல் பயணத்தை ஆரம்பித்ததோடு கடந்த இரு தினங்களுக்கு முன் சிங்கப்பூரில் நங்கூரமிட்டிருந்ததாக தெரிய வருகிறது.
குறித்த கப்பல் இன்னும் சில தினங்களில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் பசளைக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ள நிலையில், அந்நாட்டு பசளையை கப்பல் ஒன்று இலங்கைக்கு கொண்டுவருவதாக அறிய முடிகிறது.