Print this page

18 வீடுகள் சேதம்

அயகம - உடுகல வடக்கு பிரதேசத்தில் வீசிய கடும் காற்று காரணமாக 18 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடனான வானிலை காணப்படும் நிலையில், இவ்வாறு கடும் காற்று வீசியுள்ளது.

இந்த அனர்த்தத்தில் எந்த ஓர் நபருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.