Print this page

ஜனாதிபதி செயலணியில் தமிழர்களை இணைக்க ஜனாதிபதி இணக்கம்

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் தமிழர்களை இணைக்க ஜனாதிபதி கோட்டாபய நேற்று இடம்பெற்ற ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது .

இத்தகவலை பிரதமரின் பெருந்தோட்டத்துறைக்கான இணைப்புச் செயலயாளரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார் என சிலோன் டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழர்கள் செயலணியில் உள்வாங்கப்படாதது குறித்து விமர்சனங்கள் வெளியாகியுள்ளன நானும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட ஏனைய பலரும் இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்த நிலையில் அவர் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார் என செந்தில் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையினால் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டது.

எனினும் இந்த செயலணியில் தமிழ் பிரதிநிதிகள் யாரும் உள்வாங்கப்படாமை தொடர்பில் பெருமளவில் கண்டனங்கள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.