Print this page

கொட்டித் தீர்த்த மழையால் அவதிப்படும் யாழ் மக்கள்

November 01, 2021

யாழ் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாளாக மழைக் கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக யாழ். மாவட்டத்தின் ஊர்காவற்துறை, தெல்லிப்பளை, சங்கானை,  சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் அந்தந்த பிரதேச செயலர் ஊடாக பெறப்பட்டு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.