Print this page

புதிய A30 கொரோனா திரிபு

November 01, 2021

உலகின் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தும் A30 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த A30 பிறழ்வானது மிகவும் ஆபத்தானது என்றும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்கவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவித்துள்ளார். இந்த வகை வைரஸானது தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் நாட்டில் பரவ தொடங்கினாள் தற்போதைய சூழலை காட்டிலும் பாரிய பாதிப்பை விளைவிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பொறுப்பின்றி நடந்துக்கொண்டால், எதிர்வரும் 4 வாரங்களில் அபாயகரமான பெறுபேறுகளை சந்திக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன குறிப்பிடுகின்றார்.