Print this page

கொக்கேய்ன் உடன் சிக்கிய கென்ய பிரஜை

November 01, 2021

டுபாய் நாட்டில் இருந்து இலங்கை வந்த கென்ய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

டுபாய் நாட்டில் இருந்து இலங்கை வந்த கென்ய பிரஜை  கொக்கேய்ன் போதைப் பொருளை உடமையில் வைத்துள்ளார் என்ற சந்தேகத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சோதனை நடவடிக்கையின் போது, 17 கொக்கேய்ன் போதைப் பொருள் உருண்டைகளை விழுங்கிய நிலையில், சந்தேக நபரை பரிசோதித்த பின்னர் 8 கொக்கேய்ன் உருண்டைகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளன.

அதனையடுத்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஏனைய 11 உருண்டைகள் வெளியில் எடுக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

39 வயதான இந்த கென்ய பிரஜை மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப் பொருள் தடுப்பு பணியகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.