Print this page

கோட்டாபயவுக்கு எதிராக ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் போராட்டம்

November 02, 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தங்கியிருப்பதாக கூறப்படும் ஸ்காட்லாந்தின் டன்பிளேனில் உள்ள டபுள் ட்ரீ ஹோட்டலுக்கு வெளியே பல போராட்டக்காரர்கள் ஒன்று கூடும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. 

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்காக ஜனாதிபதி தேடப்பட்டு வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“நிறுத்து, இனப்படுகொலையை நிறுத்து, இலங்கை ஜனாதிபதி இனப்படுகொலைக்காக தேடப்படுகிறார்” என்று போராட்டக்காரர்கள் கோஷமிடுவதை காட்சிகளில் காணமுடிகிறது.

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இடம்பெற்று வரும் COP: 26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கு ஜனாதிபதி விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Last modified on Tuesday, 02 November 2021 09:48