Print this page

மின்சாரத் தடை குறித்து வெளியான அறிவிப்பு

November 03, 2021

உள்நாட்டு வளங்களை விற்பனை செய்வதற்கு எதிராக எரிபொருள், துறைமுகம், மின்சார ஒருங்கிணைந்த தொழிற்சங்க அமைப்பு இன்றும் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

மின்சார சபையின் ஒருங்கிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் இதனை தெரிவித்தார்.

இன்று மதியம் 12.00 மணியளவில் இலங்கை மின்சார சபையின் தலைமையகத்திற்கு முன்னால் இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிராக கொலன்னாவை எண்ணெய் தாங்கிக்கு முன்பாகவும், அதேபோல் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருந்து தெரிவித்த அவர்,

"இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களும் மின்சார சபையின் தலைமையகத்தின் முன்னால் கூடவுள்ளனர். அமெரிக்காவுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை நாட்டுக்கு வௌிப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறோம். இன்றைய தினம் பணிபகிஸ்கரிப்பு இல்லை என்பதை தௌிவாக அரசாங்கத்திற்கு கூறிக்கொள்கிறோம். மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் மின்சார பணியாளர்கள் குறித்த இடத்தில் இருக்கும் நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. என்றார்.