Print this page

தமிழ் பாடசாலைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது

November 03, 2021

மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள சகல தமிழ் பாடசாலைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாகாணங்களின் ஆளுநர்களினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த, ஒக்டோபர் 25 ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளிலும், ஆரம்பப்பிரிவுகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்கப்பட்டன.

இதற்கமைய, நாளை மறுதினம் வழங்கப்படும் விசேட விடுமுறைக்கு பிறிதொரு விடுமுறை தினத்தில் பாடசாலை நடத்தப்படும் என்று மாகாண கல்வித் திணைக்களங்கள் தெரிவித்துள்ளன.