Print this page

நுவரெலியா பஸ் விபத்தில் 50 பேர் காயம்


நுவரெலியா - வலப்பனை வீதியின் மஹவங்குவ பகுதியில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவர்கள் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

நுவரெலியா - வலப்பனை வீதியின் மஹவங்குவ பகுதியில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள், வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அம்பாறை பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் யாத்திரை பயணம் மேற்கொண்ட பஸ், இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.

Last modified on Wednesday, 11 September 2019 01:44