Print this page

வந்து குவியும் 3000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கடவுச்சீட்டு விண்ணப்பங்கள்

November 05, 2021

தற்போது வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 3,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு ​​கிடைப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் யூ.வி. சரத் ரூபசிறி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க கிரீன் கார்ட் லொட்டரிக்காக, வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களைப் பெற ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், இந் நாட்களில், ஒரு நாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக சுமார் 1,800 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன பொதுவான சேவையின் கீழ் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சுமார் 1,000 விண்ணப்பங்களும் பெறப்படுகின்றன.

இதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 2,200 விண்ணப்பங்கள், கிடைக்கப் பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Last modified on Friday, 05 November 2021 06:23