Print this page

வவுனியாவில் 3 ஆம் தர மாணவனுக்கு கோவிட் தொற்று

November 05, 2021

வவுனியா ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் தரம் 3 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவனுக்கு கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்த தொடர் முடக்கநிலை நீக்கப்பட்டு ஆரம்பபிரிவு மாணவர்களிற்கான பாடசாலைகல்வி செயற்பாடுகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வவுனியா ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் மூன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனுக்கு முன்னெடுக்கப்பட்ட   பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த மாணவனின் வகுப்பறையில் இருந்த ஏனைய மாணவர்களிற்கு நாளைய தினம் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு கொரோனா தொற்று பீடிக்கும் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால் பாடசாலைக்கு மாணவர்களை அனுப்புவதில் பெற்றோர்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.

Last modified on Friday, 05 November 2021 12:11