Print this page

நகரங்களுக்கு இடையிலான கடுகதி புகையிரத சேவைகள் ஆரம்பம்

November 05, 2021

நகரங்களுக்கு இடையிலான கடுகதி புகையிரத சேவைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்

அதன்படி ,இரவுநேர அஞ்சல் புகையிரதம் மற்றும் வழமையான நேர அட்டவணைக்கு அமைய இரவு 7 மணிக்கு பின்னர் இடம்பெறும் புகையிரத சேவைகளுடன், குறுந்தூர புகையிரத சேவைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலும் ,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதை அடுத்து கடந்த முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான அலுவலக புகையிரத சேவைகள் மாத்திரம் ஆரம்பிக்கப்பட்டன.