Print this page

ஆறு மாதங்களுக்கு கட்டணமில்லா விசா

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் பரீட்சார்த்தமாக, ஆறு மாதங்களுக்கு 36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு, வருகை விசா, கட்டணமின்றி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், நியூசிலாந்து, அவுஸ்ரேலியா, தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான், ஆகிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த திட்டத்தின் ஊடாக, விசா கட்டணம் இன்றி இந்த நாடுகளின் பயணிகள் அனுமதிக்கப்படுவதுடன், ஆறு மாதங்களுக்கு சோதனை காலத்தின் வெற்றியைப் பொறுத்து, அதனை நீடிப்பதா- இல்லையா என்று முடிவு செய்யப்படும் என, அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்தில் சுமார் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அரசாங்கம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.