Print this page

மக்கள் வெளிநாட்டுக்கு செல்வது சரியானது

November 07, 2021

மக்கள் வெளிநாட்டுக்கு செல்வது பிரச்சினைக்குரியதல்ல என்றும், அது அவர்களின் எதிர்காலத்திற்கு சிறந்ததாகும் என்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தங்களது வாழ்க்கையை மிகவும் சிறந்ததாக்கவும், வருமானத்தை அதிகரித்துக்கொள்ளவும் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். அது தவறான விடயமில்லை.

வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் எப்போதும் அந்த நாடுகளிலேயே வாழ்வதில்லை.

இவ்வாறு வெளிநாடுகளுக்கு செல்லும் பெரும்பாலானோர் மீண்டும் நாடு திரும்புகின்றனர்.

அத்துடன், நாட்டுக்குப் பெருமளவான அந்நிய செலாவணியை அவர்கள் பெற்றுத் தருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Last modified on Sunday, 07 November 2021 05:28