Print this page

பாரிய மண்சரிவால் அவதியுறும் பிளக்பூல் மக்கள்

November 08, 2021

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நுவரெலியா பிளக்பூல் பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பாதை ஊடான வாகனப் போக்குவரத்து முற்றாக தடைபட்டிருந்தது.

பின்னர்  பொலிஸாரும், இராணுவத்தினரும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் இணைந்து வீதியில் சரிந்துள்ள மண், மரம் மற்றும் கொடி, செடிகளை அகற்றி ஒரு வழி போக்குவரத்தாக மாற்றினர்.

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடை மழையால் ஆங்காங்கே மண்சரிவு அனர்த்தங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று (08) மாலை 3 மணியளவில் நுவரெலியா பிளக்பூல் பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மரமும் சரிந்து விழுந்துள்ளது. மழை தொடர்ந்ததால் மீட்பு பணியும் தாமதித்தே ஆரம்பமானது.

இந்த மண்சரிவு காரணமாக சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Tuesday, 09 November 2021 00:15