Print this page

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் கலமிறங்கிய சுகாதார ஊழியர்கள்

November 09, 2021

பல கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார துறையின் பல தொழிற்சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார பணியாளர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று பிற்பகல் கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளுக்கு முன்பாக நாடளாவிய ரீதியில் 24 மணித்தியால கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஐக்கிய சுகாதார சேவையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டெம்பிட்டியே சுகதானந்த தேரர்(empitiye Sugathananda Thera) தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, ஐ.டி.எச். , கேகாலை, அம்பாறை பொது வைத்தியசாலைகள் மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு முன்பாகவும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய சுகாதார சேவையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர்  டெம்பிட்டியே சுகதானந்த தேரர்(empitiye Sugathananda Thera) தெரிவித்துள்ளார்.

மருத்துவ ஆய்வக இராசாயனவியலாளர்கள், தாதியர்கள், மருந்தாளர்கள், கண் பரிசோதகர்கள், குடும்ப நலத் தாதியர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட 15 சுகாதாரத் தொழிற்சங்கங்கள் இந்த அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படாமை, தொழில்சார் பட்டப்படிப்பு பதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்காமை, சுகாதார நிர்வாக சேவையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலை, ஐ.டி.எச். , கேகாலை, அம்பாறை பொது வைத்தியசாலைகள் மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த ஐக்கிய சுகாதார சேவையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. 

இந்நிலையில், காசல் பெண்கள் வைத்தியசாலை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை , அபேக்ஷா மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் இடங்களில் அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படாது என  தெரிவித்தார். 

 
Last modified on Tuesday, 09 November 2021 07:21