Print this page

கனமழையால் அவதியுற்றிருந்த குருநாகல் மக்களை சந்தித்த அமைச்சர்

November 15, 2021

தொடர்ந்து கொட்டித் தீர்த்த கன மழையால் அவதியுற்றிருந்த குருநாகல் மக்களை நேரில் சென்று விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் சந்தித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் குருநாகல் மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரத்தை மட்டுமின்றி வீடுகளையும் இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாம் ஒன்று கூடி ஆதரவளிக்க வேண்டும் என அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.