Print this page

கொழும்பு - கண்டி பிரதான வீதி இன்று நண்பகல் 12.00 மணி முதல் திறக்கப்பட உள்ளது

November 17, 2021

மண்சரிவு அவதானம் காரணமாக மூடப்பட்டுள்ள கொழும்பு கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் வீதியின் ஒரு மருங்கு வாகன போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது.

இன்று நண்பகல் 12.00 மணி முதல் வீதியின் ஒரு மருங்கு இவ்வாறு திறக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மண்சரிவு அவதானம் காரணமாக கொழும்பு - கண்டி பிரதான வீதி பஹல கடுகன்னாவ பகுதியில் கடந்த 10 ஆம் திகதி மூடப்பட்டது.

இதன் காரணமாக குறித்த வீதியை பயன்படுத்திய சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Last modified on Wednesday, 17 November 2021 06:24