Print this page

மீண்டும் உச்சத்தை தொட்ட கோதுமை மா விலை

November 27, 2021

கோதுமை மாவின் விலை இன்று (சனிக்கிழமை) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக சந்தை உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை சந்தையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெதுப்பக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.