Print this page

சம்பூர் பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்த முதலை

November 28, 2021

திருகோணமலை மூதூர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சம்பூர் பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்த முதலை ஒன்று இன்று காலை திருகோணமலை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டு உப்பாறு பாலத்திற்கு கீழாக உள்ள ஆற்றுப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

இன்று காலை பொலிஸ் நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் குறித்த முதலை அடையாளங்காணப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஸ்தலத்துக்கு விஜயம்செய்த வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் முகுந்த போராட்டத்துக்கு மத்தியில் குறித்த முதலையானது மீட்கப்பட்டு மீண்டும் நீர் நிலையொன்றில் விடுவிக்கப்பட்டது.

அருகில் உள்ள ஏரியிலிருந்து உணவு தேடி குறித்த முதலையானது பொலிஸ் பைலையத்திற்குள் வந்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அத்துடன் மழை காரணமாக பரவலான காணிப்பகுதிகளில் நீர் தேங்கியிருப்பதால் அங்கு இவ்வாறான ஆபத்தான விலங்குகள் மறைந்திருக்கக் கூடும் என்பதால் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸாரால் அறிவுறுத்தப்படுகின்றனர்.

 

 

Last modified on Sunday, 28 November 2021 10:40