Print this page

மகாவலி கங்கையில் கார் கவிழ்ந்து விழுந்ததில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

November 28, 2021

கண்டி - குருதெனிய வீதியில் இலுக்மோதர பகுதியில் கார் ஒன்று மகாவலி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருந்தது.

விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தனர்.

எனினும் காரும் மற்றுமொரு நபரும் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

தற்போது காணாமல் போன 39 வயதுடைய நபரின் சடலமும் காரும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Last modified on Sunday, 28 November 2021 16:45