Print this page

நதீமால் பெரேரா விசாரணைகளின் பின்னர் விடுதலை

ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலககுழு தலைவர் என்று அறியப்படும் மாகந்துர மதுஷ் உள்ளிட்ட குழுவினடன் டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமால் பெரேரா, விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நதீமால் பெரேரா உள்ளிட்ட இருவர் டுபாய் விமான நிறுவனத்துக்கு சொந்தமான எப்.இசட். 547 என்ற விமானம் மூலம் இன்று அதிகாலை 6.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

பிரபல பாடகர் நதீமால் பெரேரா மற்றும் சிறைச்சாலை அதிகாரியான கோதாகொட ஆரச்சிகே லலித் குமார ஆகிய இருவரே, இவ்வாறு நாடு கடத்தப்பட்டிருந்தனர்.

அத்துடன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து இருவரிடமும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 07 மணி நேரம் விசாரணை நடத்தி நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last modified on Wednesday, 11 September 2019 01:43