Print this page

எரிவாயு வெடிப்புகளுக்கு விரைவில் தீர்மானம் எடுக்கப்படும்- லசந்த அழகியவண்ண

November 29, 2021

சமையல் எரிவாவு கொள்கலன் தொடர்பில் இந்த வாரத்துக்குள் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் எரிவாயு கொள்கலன்களில் வெடிப்புகள் ஏற்பட்டு வருகின்றமை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

இந்தநிலையில் இது தொடர்பான அறிக்கை கிடைக்கப்பெற்றதும் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் என்று அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எரிவாயு கொள்கலன்களில் மேற்கொள்ளப்பட்ட கலவை விகிதம் காரணமாகவே வெடிப்புகள் ஏற்பட்டு வருவதாக எதிர்கட்சிகள் இன்று நாடாளுமன்றில் குற்றம் சுமத்தியாது குறிப்பிடத்தக்கது.