Print this page

உயிரிழந்தார் முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே!

November 30, 2021

முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

1979 முதல் 1989 வரை அவர் கொழும்பு மேயராக இருந்தார். 1989 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் கீழ் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் சில காலம் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது