Print this page

கலவை மாற்றப்பட்டுள்ளதாக எரிவாயு நிறுவனம் ஒப்புக்கொள்கிறது

December 01, 2021

இலங்கையில் எரிவாயு சிலிண்டர்களின் கலவையில் சில மாற்றங்களைச் செய்து கடந்த ஜூலை மாதம் சந்தையில் பல மாதிரிகளை அறிமுகப்படுத்தியதாக Litro Gas தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் தொழிற்சாலை முகாமையாளர் திரு. ஐ. விஜயரத்ன தொலைக்காட்சி கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார் .

தற்போதுள்ள நிலையான கலவையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் சோதனை வெற்றியளிக்காததால் சிலிண்டர்கள் சந்தையில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போது சந்தையில் கிடைக்கும் எரிவாயு சிலிண்டர்களின் கலவை தற்போதைய நிலையான மதிப்புகளுக்கு ஏற்ப இருப்பதாக அவர் கூறினார்.