Print this page

மீண்டும் வர்த்தக ஒப்பந்த பேச்சு

சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களை மீண்டும் அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாகவும், அடுத்த மாதம் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அடுத்தமாதம் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அவர் சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, அமைச்சர்கள் மட்ட கலந்துரையாடலை நடத்தவுள்ளார்.

கூடிய விரைவில் இந்த ஒப்பந்தத்தை செய்து கொள்வது குறித்து சீன அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் தாம் பேசவுள்ளதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம கூறியுள்ளார்.