Print this page

அரச வாகனத்தில் சொகுசாக பயணித்த 4கால் பயணி

December 02, 2021

தம்புள்ளை மாநகர சபையினால் தம்புள்ளை மேயருக்கு ஒதுக்கப்பட்ட WP PF 3340 என்ற எண்ணைக் கொண்ட வாகனத்தில் சுவாரஸ்யமான விதத்தில் நான்கு கால்கள் கொண்ட ஒரு பயணி அரசாங்கத்தால் பணம் செலுத்திய ஓட்டுநரால் ஓட்டப்பட்டு சொகுசாக பயணித்துள்ளது.

மேயரின் வளர்ப்பு நாயே, இவ்வாறு சொகுசாக அந்த வாகனத்தில்  அரசாங்க ஓட்டுநரால் அப்பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது.

இருப்பினும், செல்ல நாயை ஏற்றிச் செல்ல அரசுக்கு சொந்தமான வாகனத்தைப் பயன்படுத்துவது சமூக ஊடக தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Last modified on Thursday, 02 December 2021 07:49