Print this page

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுத் தாக்குதல்.

December 07, 2021

யாழ்ப்பாணத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் வாள்வெட்டுத் தாக்குதலில் முடிவுக்கு வந்தது.

யாழ்ப்பாணம் நாவற்குழி புதுக்குடியிருப்பு  பகுதியில் நேற்று (06) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் 2 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் 20 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்கள் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.