Print this page

இதுவரை 238 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்

December 07, 2021

வடமாகாணத்தில் இந்த வருடத்தில் இதுவரை 238 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மாவட்டத்தில் நேற்று முதல் வரும் 12ம் தேதி வரை கொசு ஒழிப்பு வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Last modified on Tuesday, 07 December 2021 03:27