Print this page

ஆலய விடுதியில் வெட்டுக் காயங்களுடன் சடலம் மீட்பு

December 07, 2021

மட்டக்களப்பு -கொக்கட்டிச்சோலை – கற்சேனை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொக்கட்டிச்சோலை பகுதியில் 41 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவரே வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனை கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டவர் முருகப்பன் லோகிதன் என முதற்க்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கற்சேனையில் உள்ள ஆலய விடுதியில் தங்கியிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.