Print this page

2022ல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத் திருத்தங்கள்: நீதி அமைச்சர்

December 09, 2021

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) திருத்தப்பட்ட சட்டம் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொண்டு வரப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை (09) பாராளுமன்றத்தில் உரையாற்றிய நீதியமைச்சர், சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஏற்கனவே அமைச்சருக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

குழுவின் பரிந்துரைகள் மேலும் விவாதிக்கப்பட்டு, தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொடர்புடைய திருத்தப்பட்ட சட்டம் 2022ல் பகிரங்கப்படுத்தப்படும்.