Print this page

வெள்ளிக்கிழமை முதல் கொழும்பு நகரில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பூஸ்டர் டோஸ்

December 09, 2021

கொழும்பில் வெள்ளிக்கிழமை (10) முதல் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் (ஃபைசர்) வழங்கப்படும் என்று கொழும்பு மாநகர சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள அனைத்து குடிமக்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று கூறியுள்ள கொழும்பு மாநகர சபை, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் தேவையற்ற கூட்டங்களை உருவாக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.