Print this page

மதூஸ் உள்ளிட்டவர்கள் விரைவில் நாடுகடத்தல்

ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மாகந்துரே மதூஸ், மற்றும் பாடகர் அமல் பெரேரா உள்ளிட்டவர்களை இலங்கைக்கு நாடுகடத்த டுபாய் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய விரைவில் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் பொறுப்பேற்றகப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர் கஞ்சிபான இம்ரான் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

3 கொலைகள், 15 மனித கொலைகளுக்கு முயற்சித்தமை, நச்சுத்தன்மையுடைய போதைப் பொருள் வர்த்தகம் என்பன தொடர்பில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று காலை 6.20 அளவில் டுபாயிலிருந்து நாட்டை வந்தடைந்த ப்ளை டுபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் கஞ்சிபான இம்ரானுடன் மேலும் மூன்று பேர் பிரவேசித்தமை குறிப்பிடத்தக்கது.