Print this page

இந்த மாதத்தில் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதில் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்

December 12, 2021
நாட்டில் ´ஒமிக்ரோன் வைரஸ் திரிபு´ இனங்காணப்பட்டிருப்பதனால் பண்டிகைக் காலத்தில் பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரான விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இம்மாதம் மற்றும் ஜனவரி மாதங்களில் மக்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.