Print this page

உச்சத்தை தொட்ட பச்சைமிளகாய் விலை

December 15, 2021

சந்தையில் கடந்த இரு நாட்களாக பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராம் 1000 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி, கட்டுகஸ்தோட்டையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் நேற்று 400 ரூபாவிலிருந்து 1000 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

நகர வீதிகளில் நடைபாதை வியாபாரிகளின் சில்லறை வியாபாரம் தொடர்பில் மெனிக்கும்புர பொருளாதார நிலைய வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தபோது, பொருளாதார நிலையத்தில் நேற்று ஒரு கிலோ பச்சை மிளகாய் மொத்த விலை 680 – 700 ரூபாவாக இருந்ததாகத் தெரிவித்தார்.