Print this page

எரிவாயு கொள்கலனில் புதிதாக ஸ்டிக்கர் ஒட்டப்படும்- லிட்ரோ நிறுவனம்

December 15, 2021

SLSI தரத்திற்கு அமைய எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, எரிவாயு தரத்தை உறுதிப்படுத்தி எரிவாயு கொள்கலனில் புதிதாக ஸ்டிக்கர் ஒட்டப்படும் எனவும் அந்நிறுவனம் நீதிமன்றில் உறுதியளித்துள்ளது.

அதன்படி, குறித்த வழக்கு விசாரணைகளை நாளைய தினம் மீள் அழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.