Print this page

தமிழர் பாரம்பரியத்தை கடைபிடித்த சீன தூதுவர்

December 16, 2021

யாழிற்கு நேற்றைய தினம் வருகை தந்த சீனத் தூதுவர் பல்வேறு இடங்களை பார்வையிட்டார்.

அதன் பின்னர் இன்று காலை, இலங்கையில் பிரசித்தி பெற்ற, யாழில் உள்ள நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

சீன தூதுவர் கி சென் ஹொங் இந்துக்களின் பாரம்பரிய முறைப்படி உடையணிந்து ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.