Print this page

இலங்கை கடத்தல்காரர்கள் 15 பேர் கைது

December 17, 2021

இந்தியாவிற்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 15 இலங்கையர்கள் மீது தேசிய புலனாய்வு பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளுக்கு புத்தியிரூட்ட முயற்சித்ததாகவும், இலங்கைக்கு எதிராக போரில் ஈடுபட்டதாகவும் கூறியே இவர்கள் மீது இந்திய தேசிய புலனாய்வு குற்றம் சுமத்தியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் இந்த ஆண்டு மார்ச் 25ஆம் திகதி அரபிக்கடலில் மீன்பிடிக் கப்பல் ஒன்றிலிருந்து கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த கைது சம்பவத்தின்போது அவர்களிடமிருந்து பெருந்திரளான போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் என்பனவும் கைப்பற்றப்பட்டது.

- S. நிரோஷினி -

Last modified on Friday, 17 December 2021 07:05