Print this page

சான்றிதழ்களை ஏற்க மறுத்த கொழும்பு பட்டதாரிகள்

December 17, 2021
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முருத்தேடுவே ஆனந்த தேரரிடமிருந்து தங்களின் சான்றிதழ்களை ஏற்க மறுத்துவிட்டனர்.

பல்கலைக்கழகத்தின் பாரம்பரியமாக பட்டமளிப்பு விழாவில் பட்டச் சான்றிதழை சமர்ப்பிப்பது பல்கலைக்கழகத்தின் வேந்தர் தான்.

எவ்வாறாயினும், இம்முறை பட்டதாரிகள் சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவிடமிருந்து தங்களின் சான்றிதழ்களை ஏற்க மறுத்துவிட்டனர்.

ஆனந்த தேரர் தொழிற்சங்க தலைவர் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் ஆதரவாளர். அண்மையில் பொது நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஆனந்த தேரர் தமது அரசியல் பிரச்சாரத்திற்கு ஆதரவளித்ததன் காரணமாகவே பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டார் என தெரிவித்தார்.
Last modified on Friday, 17 December 2021 13:07