Print this page

கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனை அடித்து கொன்ற மனைவி

December 18, 2021

முல்லைத்தீவில் கணவனை கள்ளக்காதலனுடன் இணைந்து அடித்து கொன்றதாக மனைவி வாக்குமூலம் வழங்கியுள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் கடந்த 09 ஆம் திகதி மாங்குளம் செல்வபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

அவர் உயிரிழந்தமை தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மனைவியை கைது செய்துள்ளனர்.

மேலும் கைதான மனைவி விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last modified on Sunday, 19 December 2021 15:05