இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பாரிய நட்டத்தை சந்தித்து வருவதாக எரிசக்திக்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நட்டத்தை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் ஒரு நாளைக்கு பல தடவைகள் பகிரங்கமாக கூறுகின்றார்.
இழப்புக்கான காரணம்
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நட்டத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது.
இந்த நாட்டிலுள்ள இரண்டு நிறுவனங்களுக்கு பெற்றோலியத்தை கடனாக வழங்கியதே இதற்குக் காரணம்.
இலங்கை மின்சார சபை மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களாகும்.
மொத்த கடன் தொகை
இரண்டு நிறுவனங்களும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை ரூ. 161 பில்லியன்.
அதாவது ரூ.161,000 மில்லியன்.
அதில் ரூ. 96 பில்லியன் (ரூ. 96,000 மில்லியன்) இலங்கை மின்சார சபையினால். 65 பில்லியன் (ரூ. 65,000 மில்லியன்) என்பது ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையாகும்.
இதன் காரணமாக இவ்விரு நிறுவனங்களுக்கும் மேலும் கடன் வழங்குவதில்லை என எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.