Print this page

எரிவாயு கசிவில் சிக்கி 3,000 கோழிகள் பலியாகியுள்ளன

December 24, 2021

பன்னல பல்லேகம பகுதியில் அமைந்துள்ள கோழிப்பண்ணை ஒன்று இன்று (டிசம்பர் 24) அதிகாலை 3.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமாகியுள்ளது.

சுமார் 3,000 கோழிகள் தீயில் கருகிவிட்டன.

நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை, 35,000 கோழிகளை வளர்க்கும் திறன் கொண்டது.

எரிவாயு சிலிண்டர் கசிவு காரணமாக கோழி கூண்டு ஒன்றில் ஏற்பட்ட வெடிபில்  தீ விபத்து ஏற்பட்டது.

நீர்கொழும்பு நகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து தீயை அணைத்துள்ளனர்.

தீயினால் ஏற்பட்ட சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்னல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Last modified on Friday, 24 December 2021 08:53