Print this page

பல இலங்கைப் பெண்கள் சீனாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்

December 31, 2021

நாட்டுக்கு வந்த சீன பிரஜைகள் சிலர் இலங்கை யுவதிகள் சிலரை திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் செல்வதுடன் அங்கு தகாத தொழிலாளிகளாக மாற்றிய சம்பவம் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், சீனாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 10 இலங்கை யுவதிகள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பாதுகாப்பு பிரிவின் பிரதானியொருவர் தெரிவித்தார்.