Print this page

இன்று சில பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

December 31, 2021

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.


கடல் பகுதிகள்:

காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும்.

எவ்வாறாயினும், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்.

காற்று வடகிழக்கு திசையில் வீசும், காற்றின் வேகம் மணிக்கு 20-30 கி.மீ.

மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக நீர்கொழும்பு வரையிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக நீர்கொழும்பு வரையிலும் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சில சமயங்களில் மிதமானதாக இருக்கும்.