web log free
April 24, 2024

முன்னாள் கடற்படைத் தளபதி பாராட்டு

இலங்கை பாதுகாப்பு படைகளுடன் கூட்டு பயிற்சியை மேற்கொள்ள முன்வந்த அவுஸ்திரேலிய பாதுகாப்பு படைகளை முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட பாரட்டியுள்ளார்.

அவுஸ்ரேலிய- இலங்கை படைகளுக்கிடையில் கடந்த வாரம் நடந்த கூட்டுப் பயிற்சிகள் தொடர்பாக கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கூட்டுப் பயிற்சிகள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட இலங்கையை ஒரு முக்கியமான பாதுகாப்புப் பங்காளராக அவுஸ்ரேலியா அங்கீகரித்துள்ளதாக கூறியுள்ளார்.

பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இராணுவத்தை ஒதுக்கி வைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்ற நேரத்தில், கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ள அவுஸ்ரேலியா முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஆட்கடத்தல்களை முறியடிக்கும் அவுஸ்ரேலியாவின் முயற்சிகளுக்கு இலங்கை முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்