Print this page

சுசில் பிரேமஜயந்த அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்

ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம் சுசில் பிரேமஜயந்த உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது இன்று முதல் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

திரு. சுசில் பிரேமஜயந்த கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக பணியாற்றினார்.

Last modified on Tuesday, 04 January 2022 05:18