Print this page

மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலை பரீட்சார்த்திகள் பாடசாலை அதிபர்களூடாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள், அதற்கான விண்ணப்பங்களை தனிப்பட் ரீதியிலும் பூர்த்தி செய்து அனுப்பமுடியும்.

இதேவேளை, கல்விப்பொதுத்தராதர சாதாரணத்தரப்பரீட்சை பெறுபேற்றின் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் சான்றிதழொன்றுக்கு 600 ரூபாய் கட்டணம் அறவிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பி பூஜித  தெரிவித்துள்ளார்.

அத்துடன், பரீட்சைகள் திணைக்களத்திற்கு வருகை தந்து உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளில் 71 தசம் 66 வீதமானோர் உயர்தரத்திற்கு சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.