Print this page

மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்தில் நடத்த நடவடிக்கை

மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்தில் நடத்த நடவடிக்கை எடுக் கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒரு வருடத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் தோல்வி காரணமாகவே தேர்தல்கள் பிற்படப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது குற்றம் சுமத்தியிருந்தார்.