Print this page

நாட்டின் வளங்களைப் பாதுகாக்கக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ஜே.வி.பி யினால் நேற்று (19) மருதானை டெக்னிக்கல் சந்தியில் இருந்து பெட்டாவை நோக்கிய வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நாட்டின் வளங்களான துறைமுகங்கள், எண்ணெய் தாங்கிகள், நிலங்கள் போன்றவற்றின் உரிமையை வெளிநாட்டினருக்கு வழங்குவதை அரசாங்கம் நிறுத்தக் கோரியே இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணை அபிவிருத்தி தொடர்பாக அண்மையில் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையை இரத்து செய்யுமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.